அநியாய வசூலைத் தடுக்கத் தேவை "அம்மா ஆட்டோ"...நுகர்வோர் அமைப்பு கோரிக்கை!
சென்னை: கூடுதல் கட்டண வசூலைத் தடுக்கும் வகையில் ‘அம்மா' ஆட்டோக்களை இயக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளிடம் ஆட்டோ ஒட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சென்னையில் திருத்தப்பட்ட மீட்டர் கட்டண முறையை தமிழக அரசு அமல் படுத்தியது. ஆனபோதும், அவ்வப்போது கூடுதல் கட்டண புகார் எழத்தான் செய்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சி.பால் பர்னபாஸ், பொருளாளர் பழனிகுமார், செயலர் ஆனந்த், வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:-

காலிப் பணியிடங்களை நிரப்புதல்:
நுகர்வோர் நீதிமன்ற வழக்குகளை குறித்த காலத்தில் முடிக்கும் வகையில், இந்த நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள், அலுவலகப் பணியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

கள ஆய்வு :
அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திடவும், அவை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய,அரசு அதிகாரிகள் அவ்வப்போது களஆய்வு செய்யவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.

மருந்தகங்களில் சோதனை :
காலாவதி மருந்து, மாத்திரைகள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை :
சென்னையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், ஆட்டோ பயணிகளிடம் பேரம் பேசுவதும், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்கும் தொடர்கிறது.

அம்மா ஆட்டோக்கள் :
ஆட்டோ ஓட்டுநர்களின் தன்னிச்சையான இந்த போக்கை மாற்றும் வகையில், அம்மா ஆட்டோ என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் ஆட்டோக்களை விட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications