டெல்லி போலீஸ் பிடியில் ஜெயா டிவி ஜனா... தினகரன் தொடர்பாக மீண்டும் விசாரணை?
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் உள்ளிட்ட 16 பேரை விசாரணை வளையத்தில் டெல்லி போலீஸ் கொண்டு வந்துள்ளது. இதனால் தினகரனின் உதவியாளர் ஜெயா டிவி ஜனா விசாரணை பயத்தில் தத்தளிக்கிறா
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்று போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார் தினகரன். அதனையடுத்து அவரின் உதவியாளர் ஜனாவும் போலீஸ் கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டார்.
டெல்லியில் 2 நாளுக்கும் மேலாக வைத்தே விசாரிக்கப்பட்ட ஜனா பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்,டிடிவி தினகரன் கைதாகி 4 நாட்கள் ஆகும் நிலையிலும் அவரை சிறையில் அடைக்காமல் விசாரணை என்றே போலீசார் அலைக்கழித்து வருகிறார்கள்.

இவ்வளவு வலுவான விசாரணையை தினகரன் எதிர்பார்க்கவில்லை என்றும் இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாகும் என்பதில் குழப்பம் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது. தினகரனின் அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்தவர் என்று உணர்ந்த டெல்லி போலீஸ் முதல் வேலையாக ஜெயாடிவி ஜனாவை விசாரித்தது.
அதில் தேவையான அளவுக்கு தகவல்களை பெற்றுக்கொண்டதால் ஜனாவை வெளியே விட்டது போலீஸ். ஜனா கொடுத்த தகவல்கள் அடிப்படையிலேயே போலீசார் தினகரனைக் கைது செய்து சென்னைக்கு வந்துள்ளது.
மேலும் விசாரணைக்காக கொச்சி,விஜயவாடா மீண்டும் டெல்லி என்று தினகரன் அழைத்துச் செல்லப்படவுள்ளார். இதனால் ஜெயா டிவி ஜனாவுக்கு நாளுக்கு நாள் பயம் அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில். சிறை வாழ்க்கை தனக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சும் ஜனா அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றும், அவரை டெல்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications