கருணாநிதி குறித்த போஸ்டர் பிரிண்ட் ஆகும் புகைப்படம் வெளியாகி பரபரப்பு
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் போஸ்டர் அச்சிடுவது போன்ற புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு முதல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 11 நாளாக மருத்துவமனையில் இருக்கும் அவரை பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவிக் கொண்டுள்ளன. ஆனால் மருத்துவர்கள் கருணாநிதியைக் காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மறுபக்கம் திமுக தொண்டர்கள், கருணாநிதியின் நலம் விரும்பிகள் மருத்துவமனை முன்பு கூடி கருணாநிதியின் நலனுக்காக தொடர்ந்து பிரார்த்தித்த வண்ணம் உள்ளனர். அவரை பற்றி கிளப்பும் புரளிகளை தவிர்க்குமாறு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் கூட சமீபத்தில் உடல் நலம் சரியில்லாதவரை பற்றி கிண்டல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார். ஆனால் வதந்திகளுக்குக் குறைவே இல்லை. அத்தோடு ஆர்வக்கோளாறு திமுக தொண்டர்களால் புதிய சர்ச்சையும் வெடித்து வருகிறது.
சமீபத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் டிஜிட்டல் பேனர்களை திமுகவினர் சிலர் தயாரித்து சர்ச்சையைக் கிளப்பினர். இந்த நிலையில் இன்னொரு சர்ச்சை புகைப்படம் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இருக்கின்றனர். அந்த போஸ்டர் அச்சிடுவது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. இதை அடித்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் இது வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications