இளைஞர்களிடம் ஆசை காட்டி மோசடி... வெளிநாட்டில் ஆடம்பர செலவு - தில்லாலங்கடி நடிகை
நடிகை ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் வேலை செய்யும் திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளனர். அந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருமணம் செய்வதாக ஆசை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி செய்த நடிகை ஸ்ருதி அந்த பணத்தில் தங்க நகைகள் வாங்கியதும், வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்த புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர், திருமண தகவல் இணையதளத்தில் ஸ்ருதியின் போட்டோவைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
பாலமுருகனை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

3 ஆண்டுகளாக மோசடி
புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.கடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், 3 ஆண்டுகளாக அவரை பலரை மோசடி செய்துள்ளார். அந்த பணத்தை என்ன செய்தார் என்பதை ஸ்ருதி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தில்லாலங்கடி ஸ்ருதி
திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார்.

பலரிடம் மோசடி
லண்டன் உட்பட பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் டான்ஸ் பயிற்சி, படிப்புகளையும் கற்றேன். என்னுடைய அனைத்து செலவுகளையும் என்னை திருமணம் செய்ய விரும்பியவர்கள் ஏற்றார்கள். ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என ஒரே நேரத்தில் பலருடன் பேசி வந்தேன். பல செல்போன், சிம்கார்டுகளை இதற்காக பயன்படுத்தினேன்.

தந்தை பெயரும் மோசடி
நான் திருமணம் செய்வேன் என பணத்தை வாரி கொடுத்தார்கள். அதோடு, 18.79 லட்சத்தை தன் பெயரில் உள்ள வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்தேன். ஸ்ருதியின் உண்மையான தந்தை பெயர் ஹரிக்குமார். கல்விச்சான்றிதழில் உண்மையான தந்தையின் பெயரை போடாமல், வளர்ப்பு தந்தையின் பெயரை போலியாக மாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.

மோசடி பணத்தில் சொசுகு வாழ்க்கை
மேலும், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட பவுண்டேசன் சான்றிதழ் படிப்பிற்காக கடந்த ஆண்டில் 10 லட்சம் செலுத்தியுள்ளார். அதேபல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக 35 லட்சம் செலுத்தியுள்ளார். 3 ஆண்டிற்கும் மேலாக இப்படி ஏமாற்றியே சொகுசு வாழ்க்கை நடத்தினேன் என தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

ஜெயிலில் ஸ்ருதி
ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை காவல் விசாரணை முடிந்து கோவை ஜே.எம். 5 நீதிமன்றத்தில் 4 பேரையும் ஆஜர்படுத்தி மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications