குடிசை, ஆட்டோவிற்கு தீவைத்த போலீஸ்… அது மார்பிங் வீடியோவாம்.. டிஜிபி டி.கே. ராஜேந்திரன்
குடிசை, ஆட்டோவிற்கு போலீசாரே தீ வைத்த சம்பவம் மார்பிங் செய்யப்பட்டது என்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரையில் 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறை களமாக மாறியது.
மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி அமர்ந்திருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். மெரினாவிற்கு வரும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு சென்னை முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இதனிடையே மர்ம நபர்கள் சிலர் திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைத்தனர். சென்னை மயிலாப்பூரிலும் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. மயிலாப்பூர் டி.வி. கோயில் தெருவில் உள்ள போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதவிர, காவல்துறை பேருந்து, வேன் ஆகியவற்றை தீயில் எரிந்து சாம்பலாகின. பல மாநகர பேருந்துகள் சேதமடைந்தன. இதனால் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் போர்க்களமாக காட்சி அளித்தன.
இதேபோன்று, மெரினா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஆட்டோக்களுக்கும், குடிசைக்குள் போலீசாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே சென்னை கலவரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் ஜார்ஜ், மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே கல்வீச்சு, கலவரம் நடைபெற்றதாக கூறினார். மேலும், வாகனங்களுக்கு போலீசார் தீ வைத்ததாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த வீடியோக்கள் மார்பிங் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற கருத்தை டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனும் தெரிவித்துள்ளார். போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ள காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications