சொகுசு ரிசார்ட்டில் இருந்து எம்எல்ஏக்களை வெளியேற்றவில்லை.. ஐஜி மறுப்பு
கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் யாரையும் போலீசார் வெளியேற்றவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்ப்பார்த்து அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களுடன் தங்கி இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அவர் சென்னை திரும்பி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதனிடையே, இன்று காலை கூவத்தூரில் இருக்கும் அனைத்து எம்எல்ஏக்களும் வெளியேற வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, தாங்கள் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாகவும், வசதியுடன் இருப்பதாகவும் ஆண் எம்எல்ஏக்களும் பெண் எம்எல்ஏக்களும் தனித்தனியாக பேட்டி அளித்தார்கள்.
இந்நிலையில், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து எம்எல்ஏக்களை வெளியேற்றவில்லை என்று ஐஜி தாமரைக்கண்ணன் கூறியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே போலீசார் கூடி இருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற கூடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இங்குள்ள அனைத்து எம்எல்ஏக்களிடமும் விசாரணை நடத்தி அவர்கள் சொல்வதை பதிவு செய்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஐஜி தாமரைக் கண்ணன், எம்எல்ஏக்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றசாட்டில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!











Click it and Unblock the Notifications