சென்னை: மும்பையில் இருந்து 8 வயது சிறுமியை கடத்திய பெண் தொழிலதிபர்- 15 மணி நேரத்தில் மீட்பு!
சென்னை: சென்னை பெண் தொழிலதிபர் ஒருவர் 8 வயது சிறுமியை மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தியுள்ளார். அவளை சென்னை போலீஸ் உதவியுடன், 15 மணி நேரத்தில் மும்பை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
கடத்தப்பட்ட சிறுமியின் பெயர் கனிஷ்கா என்பதாகும். இவரது தந்தை திவாகர், தயார் ஜாஸ்மீன். சென்னை ஆலந்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபரான திவாகர் மும்பையைச் சேர்ந்த ஜாஸ்மீன் என்பவரை கடந்த 2001ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த மகள்தான் கனிஷ்கா.
சில ஆண்டுக்கு முன்பு திவாகருக்கும், ஜாஸ்மீனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கனிஷ்காவுடன் ஜாஸ்மீன் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது கனிஷ்கா மும்பையில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 3ஆம் தேதி மும்பையில் கனிஷ்கா திடீரென மாயமானார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜாஸ்மீன் மும்பை, மாதுங்கா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தியதில் திவாகரனின் தங்கை நித்யா, அவரது கணவன் வசந்த் ஆகியோர் கனிஷ்காவை கடத்தி சென்னை வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மாதுங்கா போலீஸார், சென்னை பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சரவணனை தொடர்பு கொண்டு பேசினர். இதனையடுத்து தனிப்படை அமைத்து நித்யாவையும், கனிஷ்காவையும் சென்னை போலீஸார் தேடினர். இதற்கிடையில் சென்னைக்கு வந்த மும்பை போலீஸார் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
நித்யா, அவரது கணவர் வசந்த் ஆகியோரின் செல்போன் சிக்னல் மூலம் கனிஷ்கா இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர், கனிஷ்காவை மீட்ட போலீஸார் மும்பைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி சரிதா போஷேல் கூறுகையில், ''ஜாஸ்மீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கனிஷ்காவை மும்பையில் தேடினாம். நாங்கள் மும்பை, புனே விமான நிலையங்களில் தேடுவது தெரிந்ததும் காரிலேயே மும்பையிலிருந்து சென்னைக்கு கனிஷ்காவை கொண்டு வந்துள்ளனர்.
செல்போன் மூலம் அவர்களை கண்காணித்து வந்தோம். கனிஷ்காவிடம் நடத்திய விசாரணையில் நித்யா, அவரது கணவர் வசந்த் உள்பட மூன்று பேர் மும்பை வந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.
நித்யா, சென்னையில் ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். புகார் கொடுத்த 15 மணி நேரத்தில் சென்னை போலீஸார் உதவியுடன் கனிஷ்னாவை மீட்டு இருக்கிறோம்.
கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது'' என்றார்.
சொந்த அத்தையே தனது அண்ணன் மகளை மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications