மரக்கன்று நடுவதில் ரூ. 68 கோடி ஊழல்... ஜெ. அரசு ஊழல் அரசு என்பதற்கு இதுவே சாட்சி: வைகோ
திண்டுக்கல்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தில் ரூ. 68 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 லட்சம் மரக்கன்றுகளை நடப் போவதாக அறிவித்துள்ளனர். ஒரு மரக்கன்றின் விலை ரூ1 அல்லது 2 தான் இருக்கும். ஆனால் இவர்கள் ஒரு மரக்கன்றின் விலை ரூ.100 எனக்கூறி 68 லட்சம் மரக்கன்றுகளில் ரூ. 68 கோடி ஊழல் செய்துள்ளனர். ஜெயலலிதா அரசு ஊழல் அரசு என்பதற்கு இதுவே சான்று.
மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் எனக் கேட்டு பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
மக்கள் நலக் கூட்டணி பற்றி நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் பேசி உள்ளதாக கேள்விப்பட்டேன். அதிமுக,வில் இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு மீண்டும் கட்சியில் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அந்த பயத்தில் தான் நத்தம் விஸ்வநாதன் ஏதோ பேசி உள்ளார்" என்றார்.
-
திருவள்ளுவருக்கு காவி சாயமா.. கருப்பு சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ அதிரடி கைது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications