"விட்டுட்டு போயிட்டியே நிர்மலா".. 2 குழந்தைகளை இழுத்து கொண்டு ரயில் முன் பாய்ந்து விழுந்த கணவர்!
ராணிப்பேட்டை: மனைவி நிர்மலாவின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு அழுத கணவர், அளவுக்கு அதிகமான சோகத்தினால் தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் சோளிங்கர் பகுதியை அதிர வைத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்... இவரது மனைவி நிர்மலா.. கல்யாணம் ஆகி 4 வருடமாகிறது.. நிர்மலாவுக்கு வயது 23!

சஞ்சனா என்ற 3 வயது பெண் குழந்தையும், ரித்திகா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.. வெங்கடேசன் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நிர்மலாவுக்கும், மாமியார் குடும்பத்தினருக்கும் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
அளவுக்கு அதிகமான வேதனை நெருக்கியதால், மன அழுத்தத்தில் நிர்மலா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. மனைவி இறந்த தகவல் பெங்களூருவில் உள்ள வெங்கடேசனுக்கு தெரியப்படுத்தினர்.. பதறியடித்து கொண்டு வந்த வெங்கடேசன் நிர்மலாவின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார்..
இளம்பெண் தற்கொலை குறித்த தகவலறிந்த சோளிங்கர் கொண்டபாளையம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர். மனைவியை அடக்கம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்த வெங்டேசன் அழுது கொண்டே இருந்தார்.. குடும்ப பிரச்சனையால் மனைவி தற்கொலை என்பதால், போலீசார் தன்னையும் கைது செய்து விடுவார்களோ என்று பயந்தபடியே இருந்தார்.
சோகத்துடனேயே இருந்த அவர், திடீரென தன்னுடைய 2 பெண் குழந்தைகளை அழைத்து கொண்டு வாலாஜா ரோடு ரெயில்வே ஸ்டேஷன் வந்தார்.. அந்த சமயத்தில் சென்னையிலிருந்து, கோவை நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு வெங்கடேசன் தனது 2 மகள்களை இழுத்து கொண்டு பாய்ந்து போய் ரயிலில் விழுந்தார்.
இதில் 3 பேரின் உடலும் துண்டுதுண்டாக சிதறி தண்டவாளத்தில் விழுந்தது.. தகவலறிந்த வாலாஜா ரோடு ரெயில்வே போலீசார், ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சிதறி கிடந்த உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள.. மனைவி இறந்த சோகத்தில் கணவன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள.. அநியாயமாக ஒரு குடும்பமே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications