காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: இழுத்து செல்ல பெற்றோர் வந்ததால் தப்பி ஓட்டம்
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை பெற்றோர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் காயத்ரி, விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காதல் ஜோடி சேலையூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர் காயத்ரியை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயன்றர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து தங்களின் உயிரை காத்துக்கொள்ள அந்த தம்பதியர் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றது.
ஜாதி மாறி திருமணம்
ஜாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் போன்ற பல தலித் இளைஞர்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
தலித் இளைஞர் கொலை
ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், உடுமலை பேட்டையல் பட்டப்பகலில் சங்கர் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இளம் பெண் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதல் ஜோடி தஞ்சம்
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை பெற்றோர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் மிரட்டல்
சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் காயத்ரி. இவர், தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், இருவருக்கும் அவர்களது பெற்றோர் மூலம் மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் தஞ்சம்
இந்நிலையில், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, காதல் ஜோடி சேலையூர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த காயத்திரி பெற்றோர், அங்கு வந்து காயத்ரியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.
பெண் மறுப்பு
ஆனால் காயத்திரி பெற்றோருடன் வர மறுத்து, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனால் நான் வி விக்னேஷ் உடன் தான் செல்வேன், உங்களுடன் வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். ஆனாலும் இதை ஏற்காத பெற்றோர் காயத்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
தப்பி ஓட்டம்
காவல் நிலையத்தில், அதுவும் காவல்துறையினர் கண் எதிரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி, தங்களது உயிரை காத்துக்கொள்ள காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சினிமா காட்சி போல நடைபெற்ற இந்த சம்பவத்தால் சேலையூர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications