துக்கத்தில் மூழ்கிய திருமண வீடு: அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி கார் மோதி பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளின் திருமணத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி சாலை விபத்தில் பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள நாரணமங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(54). அவரது மனைவி ஜெயா(42). அவர்கள் தங்களின் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயம் செய்தனர்.
இதையடுத்து திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுக்க நாகராஜனும், ஜெயாவும் பைக்கில் கிளம்பினர். அவர்களின் பைக் சிங்கனேந்தலில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற கார் அவர்களின் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நாகராஜனும், ஜெயாவும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications