சாரல் மழை... குளுகுளு காற்று - ஜில்லென தொடங்கியது குற்றால சீசன்
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது.
சென்னை: சிலு சிலு சாரல் மழை, குளுகுளு காற்றுடன் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும்.
இதமான சாரல்... குளு குளு காற்றை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள். இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதலே குற்றால சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

களைகட்டும் குற்றால சீசன்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது. மழை வலுப்பெற்று உள்ளதால் குற்றாலம், ஐந்தருவி,உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அருவிகளில் வெள்ளம்
மழை தீவிரமடைந்துள்ளதால் இரவு முதல் ஐந்தருவி, குற்றாலம் மெயின் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஐந்தருவியில் வெள்ளம் குறைந்தது. அங்கு மட்டும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பிரதான அருவி
இன்று அதிகாலை 5மணி முதல் குற்றாலம் மெயின் அர்வியில் தண்ணீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை குளிக்க காவல்துறையினர் அனுமதி அளித்ததால் உற்சாக குளியல் போட்டனர்.

பயணிகள் வருகை
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என பெரும்பாலான அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவி களுக்கு திரண்டு வந்து உற்சாகத்தோடு குளித்து சென்ற வண்ண ம் உள்ளனர்.

களை கட்டிய சீசன்
இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சீசன் களை கட்ட தொடங்கியுள்ளதையடுத்து அங்கு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications