தென்காசி பகுதியில் வெளுத்தெடுத்த கனமழை.. வெள்ளப்பெருக்கு.. குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கடனாநதி அணைப் பகுதியில் 23.மி.மீ மழை பொழிந்துள்ளது.

லட்சதீவு - குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications