கழிவறை வாயிலில் பொதுமக்கள் படத்தை ஒட்டி கேவலப்படுத்திய கோவை மாநகராட்சி
கோவை: பெண்ணின் குடும்ப புகைப்படத்தை மாநகராட்சி கழிவறைகளில் ஒட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட பெண் மனுகொடுத்துள்ளார்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராசபுரத்தில் வசிக்கும் சாந்தி என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு என்றுகூறி எங்களையும், அங்கு வசிக்கும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களின் குழந்தைகளை ஒன்றாக நிற்க வைத்து குரூப் போட்டோ எடுத்தனர்.தற்போது அந்த போட்டோ தமிழகம் முழுவதும் 'நம்ம டாய்லெட்'டுகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் உள்ள குழந்தைகள் பள்ளி சென்றால் உடன் படிக்கும் மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று கூறுகின்றனர். படத்தில் உள்ள சண்முகப்பிரியா என்ற பெண் கணவரை பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குடும்பத்திலும் பிரச்னை ஏற்படுகிறது.
ஆகவே எங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தமிழகம் முழுவதும் 'நம்ம டாஸ்லெட்'டுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
மனு கொடுத்த பின்னர் சாந்தி உள்ளிட்ட சிலர் கோவை ரேஸ்கோர்ஸ், வ.உ.சி பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள நம்ம டாய்லட்டுகளில் ஒட்டப்பட்டிருந்த தங்கள் படங்களை கிழித்து எறிந்தனர்.
பொதுமக்களின் நலனுக்கான நலத்திட்டத்திற்கு எடுத்த புகைப்படங்களை அரசு அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் கோவையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications