ஊரே கொண்டாடிய மாடு மலை தாண்டும் விநோத விழா - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: அரவக்குறிச்சி அருகேயுள்ள குரும்பப்பட்டி என்ற ஊரில் மாடு மலை தாண்டும் விழா என்கிற விநோத நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தற்போது அந்த விழா அங்கு கோலாகலமாக நடைபெற்றது.

மாடு மலை தாண்டும் விழா என்ற விநோதத் திருவிழா பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அரவக்குறிச்சி அருகேயுள்ள குரும்பப்பட்டி என்ற ஊரில் நடைபெற்று வருகிறது.

cow race festival was celebrated in kurumpapatti village

இந்தத் திருவிழாவில் போட்டியில் பங்கேற்கும் மாடுகள் கழுத்தில் மாலை இடப்பட்டு, அவை போட்டி நடக்கவுள்ள மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அழைத்து செல்லப்படும். பின்பு அங்கிருந்து அவிழ்த்து விடப்படும். மாடுடன், மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வர வேண்டும்.

எந்த மாடு முதலில் வருகிறதோ அதற்கு வாழைப் பழம், பூ, எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்படும். இந்த விழா தற்போது குரும்பப்பட்டியில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதில் 300 மாடுகள் பங்கேற்றன. இது கௌரவத்துக்காக நடத்தப்படும் விழா என அவ்வூர் பொதுமக்கள் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Arvakurichi, a different cow running festival was held and nearly 300 cows participated in this festival.
Please Wait while comments are loading...