நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் குழாயில் உடைப்பு- கச்சா எண்ணெய் வெளியேறியது!
நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பெருமளவு கச்சா எண்ணெய் வெளியேறி குளம் போல தேங்கியிருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பெருமளவு கச்சா எண்ணெய் வெளியேறி குளம் போல தேங்கியிருக்கிறது.
நாகூர் சில்லடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான லிட்டர் கச்சா எண்ணெய் வெளியேறியது.

தற்போது கச்சா எண்ணெய் அப்பகுதியில் குளம் போல தேங்கியுள்ளது. இதனை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications