அதிமுக அணியில் இ.கம்யூ.க்கு தென்காசி, சிவகங்கை - மார்க்சிஸ்ட் கட்சிக்கு நாகை, கோவை?

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் குழுக்கள் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மொத்தம் 10 தொகுதிகளை அதிமுக தலைமையிடம் கொடுத்துள்ளதாம்.
மார்க்சிஸ்ட் கொடுத்த 10 தொகுதிகள்..
வட சென்னை, மதுரை, திருப்பூர், விழுப்புரம், நாகப்பட்டினம், விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், தென்காசி, கோவை ஆகியவைதான் மார்க்சிஸ்ட் கேட்கும் தொகுதிகள்..
3 தொகுதிகள்..
இதில் 3 தொகுதிகளை எப்படியும் வாங்கிவிடுவது என்பது மார்க்சிஸ் விருப்பம்.
2 தொகுதிகளை கொடுக்கிறது அதிமுக
ஆனால் நாகப்பட்டினம், கோவை ஆகிய 2 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிமுக கொடுக்கலாம் எனத் தெரிகிறது.
இந்திய கம்யூ கொடுத்த 8 தொகுதிகள்
இதேபோல் தென்காசி, மதுரை, நாகை, சிவகங்கை, வட சென்னை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்திருக்கிறது.
3க்கு குறி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எப்படியும் 3 தொகுதிகளை வாங்கிவிடுவது என்பதில் குறியாக பேச்சுநடத்திக் கொண்டிருக்கிறதாம்..
2 தொகுதிகள்..
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு போலவே 2 தொகுதிகளை அதிமுக கொடுக்கலாம் எனத் தெரிகிறது. சிவகங்கையும் தென்காசியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு போகலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications