பேசிக் கொண்டிருந்த போதே மேடையில் மயங்கி விழுந்த டி.ராஜா... மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் தியாகராயநகர் முருகன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செயலாளர் டி.ராஜா, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், "கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, டி.ராஜா மயங்கி விழுந்தார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது பூரண குணநலத்துடன் அவர் உள்ளார். திங்கள்கிழமை (இன்று) அவர் வீடு திரும்புவார்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications