மதுரையில் சிபிஎம் அகில இந்திய மாநாடு- 53 ஆண்டுகளுக்கு பின் 'வைகை' சங்கமம்-குவிந்த இடதுசாரிகள்!
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம் (CPI(M) அகில இந்திய 24-வது மாநாடு மதுரையில் சீத்தாராம் யெச்சூரி நகரில் (தமுக்கம் மைதானம்) இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து இடதுசாரி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். 53 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் சிபிஎம் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது.
மதுரையில் 53 ஆண்டுகளுக்குப் பின்னர் சிபிஎம்-ன் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் புத்ததேவ் பட்டாச் சார்யா நுழைவு வாயில் முன்பு கட்சியின் மூத்தத் தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றினார்.

நாகை மாவட்டம் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் நினைவாக கொண்டு வரப்பட்ட செங்கொடியை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வழங்க, கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாதன் பெற்றுக் கொண்டார். பின்னர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த மாநாட்டின் துவக்கமாக, ஷேக் மஸ்தான் ஒருங்கிணைப்பில், நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் மல்லாரி இசை நிகழ்ச்சியும், பாம்பம்பாடி ஜமா குழுவினரின் பெரியமேளம் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொது மாநாடு - வாழ்த்துரை காலை 10.30 மணிக்கு, கொடியேரி பாலகிருஷ்ணன் நினைவரங்கில் தொடங்குகிறது. இந்நிகழ்வுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமை வகிக்கிறார்.
மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும் மத்தியக்குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றுகிறார். சிஎபிம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் துவக்க உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (எம்.எல்) விடுதலை பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசுகின்றனர்.
பிற்பகலில் பிரதிநிதிகள் மாநாடு துவங்குகிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி முற்பகல் வரை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணிக்கு, பாப்பம்பாடி ஜமா பெரியமேளம், திண்டுக்கல் சக்தி குழுவினரின் போர்ப்பறை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், எம். சசிகுமார் ஆகியோர் உரைநிகழ்த்துகின்றனர்.












Click it and Unblock the Notifications