காவிரி: இரு மாநில மக்களின் மோதலாக மாற்றுவது பிரச்சனைக்கு தீர்வு அல்ல- ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக காவிரி பிரச்சனையை இரு மாநில மக்களின் மோதலாக மாற்றுவது பிரச்சனைக்கு தீர்வு அல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நதி நீர் பிரச்சனையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கில், தினசரி விநாடிக்கு 15000 கன அடி வீதம் தண்ணீர் 10 நாட்களுக்கு கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. கர்நாடக மாநிலத்தில் பரவலாக எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்தியில், அம்மாநில அரசு தண்ணீரைத் திறந்து விட்டது. கர்நாடக அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று விநாடிக்கு 12000 கனஅடி மட்டும் திறந்து விட வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது.

தாக்குதல்களுக்கு கண்டனம்
இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்துக்குரியதாகும். அதன் எதிர் வினையாக, தமிழகத்தில் கன்னட நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளதும் ஏற்க முடியாதது.

பிரச்சனைக்கு தீர்வு இல்லை
மாநில நலன்களுக்காக, உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவது வேறு. இரு மாநிலங்களில் உள்ள அப்பாவி மக்களையும், அவர்களது சொத்துக்களையும் தாக்குவது, நாசப்படுத்துவது, குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக இப்பிரச்சனையை இரு மாநில மக்களுக்கிடையிலான மோதல்களாக மாற்றுவதும் பிரச்னையைத் தீர்க்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

நடவடிக்கை தேவை
இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப்பிரச்சனையை, இரண்டு மாநில மக்களுக்கு இடையிலான மோதலாக உருவாகி விடாமல் இரண்டு மாநில மக்களுடைய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஜனநாயக இயக்கங்களுக்கு உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பாடாமல் அமைதியை பாதுகாப்பதற்கு தமிழகம், கர்நாடக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

நடுவர் மன்ற தீர்ப்பு
மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமலாக்கிட அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.
-
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு












Click it and Unblock the Notifications