சீட் பெல்ட் போட்டு கார் ஓட்டுங்க: இல்லாட்டி ரூ.100 பைன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று முதல் காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

சீட் பெல்ட் அணிவதை அனைவரும் பின்பற்றும் வகையில் சென்னையில் காரில் செல்வபர்கள் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் அபராதம் விதித்தப்படும் என்று போக்குவரத்து காவல் துறை அண்மையில் அறிவித்தது.

Crackdown on seat belts begins, old cars under scanner

அது குறித்த விழிப்புணர்வு பிராசாரத்தை கடந்த இரு வாரங்களாக போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீட் பெல்ட் அணியாமல் காரின் முன் இருக்கையில் பயணித்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் (டிசம்பர் 9) அமலுக்கு வருகிறது.

சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கப்பட உள்ளது.இதற்காக போக்குவரத்து காவல் துறை சார்பில் 50 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள போலீஸார் திங்கள்கிழமை முதல் நகரின் பல்வேறு இடங்களில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 177-இன் படி, காரின் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானாவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை.

சீட் பெல்ட் அணியாமல் இருப்பவர்களிடம் ரூ. 100 அபராதம் வசூலிக்கப்படும், மீண்டும் இரண்டாவது முறையாக அதே நபர் பிடிபட்டால் ரூ. 300 அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+