கோடை வெயிலால் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - சிவகாசியில் விபரீதம்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் வெடிபொருட்கள் இருந்த அறை இடிந்து தரைமட்டமானது.
சிவகாசி அருகே உள்ள வேம்பங்கொட்டையை அடுத்த காயல்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று பட்டாசு செய்ய வைத்திருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பட்டாசு ஆலையில் பட்டாசு செய்ய உபயோகிக்கப் படும் வெடிபொருட்களை கலக்கும் போது அதில் இருந்து அதிகமாக புகை வந்துள்ளது. இதனைப் பார்த்த தொழிலாளி உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்து விட்டார்.
அப்போது அந்த வெடிமருந்து அதிக சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அறை தரைமட்டமானது.கோடை வெயில் காரணமாக, மருந்து உராய்வினால் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications