சென்னை அருகே சோப்பு ஆலையில் பங்கர விபத்து: பட்டாசு வெடித்து விழுந்ததால் தீ பிடித்தது- ஒருவர் பலி
சென்னை அருகே சோப்பு ஆலைக்குள் பட்டாசு வெடித்து விழுந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை : ஊரப்பாக்கத்த்தில் சிறுவர்கள் வெடித்த பட்டாசு சோப்பு ஆலைக்குள் விழுந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சோப்பு தொழிற்சாலை உரிமையாளர் பலியானார்.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்றும் பள்ளி விடுமுறை என்பதால் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடுவதைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர்ப்பகுதியான ஊரப்பாக்கத்தில் இயங்கி வரும் சோப்பு தொழிற்சாலைக்கு அருகில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர்.

இதில் ஒரு பட்டாசு ஆலைக்குள் வெடித்து விழுந்ததாகத் தெரிகிறது. இதில் ரசாயன ஆலைக்குள் இருந்த கெமிக்கல்கள் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சோப்பு ஆலையின் உரிமையாளர் விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சில தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீயை அணைப்பதற்காக தாம்பரம், மறைமலைநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்ப வாகனங்கள் வந்து தீணை அணைத்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே அனுமதியின்றி ரசாயன ஆலை இந்தப் பகுதியில் இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது. ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஊரப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications