சென்னையில் பட்டாசு புகைமூட்டம்.. மூச்சு திணறல், அலர்ஜியால் மக்கள் பாதிப்பு
சென்னை: தீபாவளி பட்டாசுகளால் ஏற்பட்ட மாசு காரணமாக சென்னை நகரில் பல மக்கள் மூச்சுத்திணறல், அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு தீபாவளி பெரிய அளவில் தீ விபத்துகள் இல்லாமல் கடந்து சென்றுள்ளபோதிலும், புகை பெரும் பாதிப்புகளை விட்டுச் சென்றுள்ளது. சென்னையில் 5 பகுதிகளில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் வழக்கத்தைவிட சுமார் 10 மடங்கு அதிகமாக காற்று மாசடைந்தது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டவே சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றனர்.

சவுகார்பேட்டை
சவுகார்பேட்டையில் 777 மைக்ரோகிராம் என்ற அளவுக்கு காற்றில் மாசு கலந்திருந்தது. இதுதான் சென்னையின் அதிகபட்ச மாசடைந்த பகுதியாகும். இரவு 9 மணியளவில் கத்தீட்ரல் சாலை பகுதியில் சென்றவர்களால் சாலையையே பார்க்க முடியாத அளவுக்கு புகை மூட்டம் இருந்துள்ளது.

அலர்ஜி பாதிப்பு
திருவல்லிக்கேணியில் காற்று மாசு 12 மடங்கு அதிகரித்துள்ளது. தி.நகரை சேர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், எங்கள் வீடு முழுக்க புகை மூட்டமாகிவிட்டது. என்னால் சற்று தூரத்தில் இருப்பவர்களை பார்க்கவே முடியவில்லை. அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றார்.

மூச்சு திணறல்
ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த தீபாவளி பெரும் சிரமங்களை கொடுத்துள்ளது. இருமல், தும்மல் என அவர்கள் படாதபாடு பட்டுள்ளனர், இந்த புகை மூட்டத்தினால்.

தீ குறைவு, புகை அதிகம்
அதே நேரம், கடந்த வருடத்தை ஒப்பிட்டால் தீ விபத்துகள் குறைவு. அண்ணாநகர் மற்றும் நொலம்பூர் பகுதிகளில் தார்ப்பாய் வேயப்பட்ட இரு கூரைகள் தீ பிடித்துள்ளன. ஊரப்பாக்கத்தில் ரசாயன ஆலையில் நடந்த விபத்தில் சட்டவிரோத குடோன் நடத்திவந்த அதன் உரிமையாளர் பலியானார். சென்னை மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், செவ்வாய்க்கிழமை தீ விபத்து தொடர்பாக 7 அழைப்புகளும், புதன்கிழமை 46 அழைப்புகளும் வந்தன. 20 அழைப்புகள் வியாழக்கிழமை வந்தன என்றார். இது முந்தைய தீபாவளிகளை காட்டிலும் குறைவுதான்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications