சைக்கிள்கேப்பில்.. வேலையை காட்டிய விசிக நிர்வாகி.. ஸ்டேஷனுக்கு போகும்போதெல்லாம்.. கதறும் இளம்பெண்
விசிக நிர்வாகி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததால் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
தென்காசி: கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் ஒருவர், வழக்கறிஞரர் ஒருவர் மீது பாலியல் குற்றம் சாட்டி உள்ளார்.. புகாருக்கு உள்ளானவர், தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் என்பதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் வீரசிகாமணி அருகே அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி சிவகுருநாதன்.. 39 வயதாகிறது.. இவர் அரியநாயகிபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவராக உள்ளார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது கிராமத்துக்கு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காசி சிவகுருநாதன் மீது புகார் தந்துள்ளார். இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர்.. ஆனால், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்... எனவே, எப்படியாவது தன்னை, கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி. காசி சிவகுருநாதனிடம் சொல்லி உள்ளார்.. இதுதொடர்பான விசாரணையும் புளியங்குடி மகளிர் ஸ்டேஷனில் நடந்து வந்துள்ளது.
ஸ்டேஷனுக்கு அந்த பெண் செல்லும்போதெல்லாம், கூடவே உதவிக்கு காசி சிவகுருநாதனும் சென்று வந்துள்ளதாக தெரிகிறது.. அதுபோன்ற நேரத்தில் இப்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தாராம் காசி சிவகுருநாதன். மேலும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், சேர்ந்தமரம் போலீஸில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின்பேரில் சேர்ந்தமரம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் வழக்கறிஞர் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது.. எனவே, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.. உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த விசிக பிரமுகரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அவர் சென்னையில் முக்கிய பிரமுகர் கஸ்டடியில் இருப்பதாகவும் ஒரு தகவல் வலம்வருவது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது











Click it and Unblock the Notifications