வருமான வரித்துறையினர் பிடியில் ராமமோகன் ராவ் மட்டுமல்ல... மேலும் 10 ஐஏஎஸ்கள் சிக்குகிறார்கள்?
சஸ்பெண்ட் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்
சென்னை: போயஸ் கார்டன் வீட்டுக்கு நெருக்கமான ராம மோகன் ராவ் உடன் நட்பாக இருந்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராம மோகனராவ் வீடு மற்றும் உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் புதன்கிழுழமை வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது மகன், சம்பந்தி, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. பல கோடி பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.

வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து வியாழக்கிழமையன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்குப் பதில், புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்தார்.
தமிழக அரசின் 78 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக வருமான வரித்துறையினர் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்துள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது' என அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதே நேரத்தில் ராம மோகன் ராவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ராம மோகன் ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். வருமான வரித்துறையினர் அளிக்கும் அறிக்கையை வைத்து அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டது போல அவருடன் நெருக்கமாக இருந்த ராம மோகன் ராவ் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ராம மோகன் ராவ் மட்டுமல்லாது, சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications