ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி! - வீடியோ

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமனி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமனி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை தேவை என பல்வேறு கட்சிகள் கூறிவரும் நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமனி ராமதாஸும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறிருப்பதாவது: ''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா மருத்துவமனையில் வீடியோ எடுத்தார் என தினகரன் கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை.

 Criticizing Jayalalitha's death is not good said Anbumani Ramdoss

மருத்துவமனையில் ஜெயலலிதா நைட்டியிலும் உடல் மெலிந்தும் காணப்பட்டார் என்று தினகரன் கூறுவது மருத்துவ அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. சசிகலா, ஜெயலலிதாவை வீடியோ எடுக்கும் போது இளைத்திருந்தால், இறந்தபோதும் அவர் அப்படித்தானே இருந்திருகக் வேண்டும்? ஆனால் இறந்தபோது அவர் உடல் பருமனாகத்தானே இருந்தது. ஆக மருத்துவ அடிப்படையில் தினகரன் கூறியதில் எதுவும் உண்மை இல்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒரு தகவல் சொல்வதன் பிண்ணனியில் அரசியல் கணக்கு உள்ளது. ஒரு சாதாரண மனிதனின் மரணத்தை சர்ச்சையாக்குவதே தவறு என்னும் போது, தமிழக முதலமைச்சராக இருந்தவர் மரணத்தை அவரது கட்சியினரே சர்ச்சைக்குள்ளாக்குவது, ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.''

இவ்வாறு அன்புமனி ராமதாஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+