கடலூர் அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்திய 50 கைதிகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூரில் அரசு மருத்துவமனையை சிறை தண்டனை பெற்ற கைதிகள் சுத்தப்படுத்திய சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் காடாய் வளர்ந்து நின்ற முற்புதர்கள், செடி, கொடிகளை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 தண்டனை கைதிகள் வெட்டி அகற்றி சுத்தப்படுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகள், காடாய் வளர்ந்து நிற்கும் முற்புதர்கள், செடி, கொடிகளால் மருத்துவமனையில் கொசுத் தொல்லையும், பூச்சி பொட்டுகள் இருப்பது தெரியாது என்றும் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் தண்டனை கைதிகளை கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடந்தது.












Click it and Unblock the Notifications