குரூப்- 2 விடைகள் வெளியான விவகாரம் – மறுதேர்வு கோரி கடலூரில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வின் விடைகள் முன்னாதாகவே வெளியேறிய சம்பவத்தில் அத்தேர்வை ரத்து செய்யக் கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
கடந்த 2012 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் கடலூரில் தேர்வுக்கு முன்னதாகவே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கடலூரைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-2 "அ" தேர்வுக்கான விடைகள் அடங்கிய துண்டுச்சீட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அத்தேர்வுக்கான வினாத்தாளும் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகி விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக எழுந்துள்ள விவகாரம், போட்டித்தேர்வு எழுதிய இளைஞர்களிடையே கடும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இத்தேர்வை எழுதிய இளைஞர்கள் நேற்று கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இத்தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தேர்வின்போதே இவ்வளவு குளறுபடிகள் என்றால், அறிவிக்கப்படும் முடிவெல்லாம் உண்மையான வெற்றியாளர்களைத்தான் கொண்டுள்ளதா, இல்லை பணத்திற்கு விலை போய்தான் வெளியிடப்படுகின்றதா என்று ஆத்திரத்தை வெளிக்காட்டியுள்ளனர் போட்டித்தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications