For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 லாக்கரில் இருந்தது மட்டும்தான் கொள்ளை போயுள்ளது.. மற்றவை பத்திரமாக உள்ளது.. ஐஓபி வங்கி விளக்கம்

வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது என விருகம்பாக்கம் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விருகம்பாக்கம் IOB Bank கொள்ளை குறித்து அதிகாரிகள் விளக்கம்- வீடியோ

    சென்னை: இரண்டு லாக்கரில் இருந்ததை தவிர மற்ற லாக்கர்களில் இருந்த வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகள் பத்திரமாக உள்ளது என விருகம்பாக்கம் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது.

    சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் 3 தளங்கள் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றனர்.

    அப்போது அங்கே லாக்கர்கள் இருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வங்கி உயரதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரூ.30 லட்சம் கொள்ளை

    ரூ.30 லட்சம் கொள்ளை

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் நகைகள் கொள்ளை போயிருப்பதை அறிந்தனர். லாக்கர் எண் 259 மற்றும் 654 இருந்த 30 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டது.

    குவியும் வாடிக்கையாளர்கள்

    குவியும் வாடிக்கையாளர்கள்

    ஆனால் வங்கியில் இருந்த மொத்த பணம் மற்றும் அனைத்து நகைகளும் கொள்ளை போனதாக தகவல் பரவியது. இதனால் பதறிய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

    வதந்திகளை நம்பவேண்டாம்

    வதந்திகளை நம்பவேண்டாம்

    இந்நிலையில் வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என விருகம்பாக்கம் ஐஓபி வங்கி விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகள் பத்திரமாக உள்ளது என்றும் விருகம்பாக்கம் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பாக உள்ளது

    பாதுகாப்பாக உள்ளது

    லாக்கர் எண்.259, 654ஐ தவிர்த்து மற்ற லாக்கர்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது. வங்கி விளக்கம் அளித்துள்ள போதும் மக்கள் தொடர்ந்து வங்கிக்கு குவிந்து வருகின்றனர்.

    English summary
    Virukambakkam IOB Bank explains The Customers cash and jewels are safe. IOB Bank requests that Customers do not believ rumours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X