ஓகி புயல் பாதிப்பு: நாகர்கோவிலில் காலம் கடந்து வந்த அதிகாரிகள் - விரட்டிய மீனவ மக்கள்
கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதிப்பால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலம் கடந்த ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை மீனவ கிராம மக்கள் விரட்டி அடித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் வந்த அதிகாரிகளை பொது மக்கள் விரட்டி அடித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஓகி புயல் கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் சாவான், மீன்வளத்துறை அதிகாரிகள் மாலை குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்வையிட சென்றனர்.

முதலில் நீரோடி பங்குதந்தை இல்லத்திற்கு சென்ற அதிகாரிகள் மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் சின்னத்துறை கிராமத்திற்கு வந்தனர். அவர்களை எதிர்பார்த்து காத்திருந்த பொது மக்கள் அதிகாரிகள் வந்ததும் மொத்தமாக சிறைப்பிடித்தனர்.
ஓகி புயலால் சேதம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி விட்டது. இப்போது எதற்காக வந்தீர்கள். அப்போது எங்கே போனீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியதால் பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
அவர்களுக்கு பதில் அளித்துவிட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்த அதிகாரிகள் தூத்துர் கிராமத்திற்கு சென்றனர். அங்கும் பொது மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து கேள்வி எழுப்பியதால் அதிகாரிகளின் ரத்த அழுத்தம் எகிறியது.
அப்போது அவர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி நீங்கள் படகுகளை அனுப்புங்கள் நான் அனுமதி தருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் மத்திய அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் மீனவ கிராமத்தில் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு பீதியை கிளம்பியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications