வங்கக் கடலில் உருவாகி.. கன்னியாகுமரியை சூறையாடி.. அரபிக்கு ஓடிப் போன ஓகி!
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தென்தமிழகத்தை சூறையாடிவிட்டு அரபிக்கடலுக்கு ஓடிவிட்டது.
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக உருமாறி கன்னியாகுமரியில் களமாடியது. அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவுபகுதியில் கரையைக் கடக்கப் போகிறது ஓகி புயல்.
வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. கன்னியாகுமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திலும் இலங்கையில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும் இருந்த அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.
ஓகி என்று பெயரிடப்பட்ட அந்த புயல் நேற்று கன்னியாகுமரியை நெருங்கியது. கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டிருந்த போது கனமழை கொட்டித்தீர்த்தது.

களமாடிய ஓகி புயல்
ஓகி புயலின் கோர தாண்டவத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

முடங்கிய குமரி
சூறைக்காற்றால் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்துள்ளன. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கை காரணமாகவே அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

வெள்ளத்தில் போன பாலம்
திருநெல்வேலியில் கொடுமுடியாறு அணை நிரம்பியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், நம்பியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

கரைபுரண்ட வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அங்குள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

விலகிப் போன ஓகி
புயலானது குமரிக் கடல் பகுதியில் இருந்து இன்று விலகிச் செல்லத் தொடங்கியது. மேலும் வலுப்பெற்ற புயல், தற்போது திருவனந்தபுரத்திற்கு மேற்கே 230 கி.மீ. தொலைவில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

லட்சத்தீவில் மையம்
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் ஒக்கி புயல் தீவிர புயலாக வலுவடைந்து இன்று காலை 8.30 மணியளவில் லட்சத் தீவுகள் பகுதியில் உள்ள அமினிதிவி ((Aminidivi)) தீவில் இருந்து தென்கிழக்கே சுமார் 270 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக

லட்சத்தீவில் சூறாவளியாக ஓகி
லட்சத்தீவு பகுதிகளில் ஓகி மையம் கொண்டுள்ளதால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகி புயல் டிசம்பர் 2 ஆம் தேதி நாளை கரையைக் கடக்கும் என்றும் அதன் பின்னர் வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சூறையாடப்போகும் ஓகி
வங்கக் கடலில் உருவாகி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சூறையாடிய ஓகி புயல் லட்சத்தீவுகளில் கரையைக் கடக்கும் போது மிகமிக அதிக அளவில் கனமழையாக கொட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. ஓகி ஓடிப்போனாலும் தென்மாவட்ட அணைகளை நிரப்பிவிட்டு சென்றுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications