ஓகி புயல் குமரியை விட்டு விலகியது.... லட்சத்தீவுகளை நோக்கி நகருகிறது #cyclone ockhi
ஓகி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
கன்னியாகுமரி : கன்னியாகுமரியை அச்சுறுத்துக் கொண்டிருந்த ஒகி புயல் விலகிச் சென்றது திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவில் தற்போது ஓகி புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது நேற்று அது மீண்டும் வலுப்பெற்று ஓகி புயலாக உருவெடுத்தது.
இந்த புயல் சின்னம் காரணமாக தென் மாவட்டங்களில் காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. மழையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் அதிகம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அருவிகளிலும், ஆறுகளிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 22 செமீ மழை பதிவாகியுள்ளது. தக்கலை பேச்சிப்பாறையில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது.

ஓகி புயலின் மிரட்டல்
இதனிடையே கன்னியாகுமரியை மிரட்டிய ஓகி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் ஒகி புயல் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

கேரளாவில் பலத்த மழை
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் ஓகி புயலால் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழை, கோட்டயம், பத்தனந்திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நகரும் ஓகி புயல்
குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் உருவான இந்தப் புயல் லட்சத்தீவில் மையம் கொண்ட பின் கடலிலே வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புயல் எச்சரிக்கை மையம்
அதே நேரத்தில் கடல் சூழல் சாதகமாக இருந்தால், வட கிழக்காக கோவா, மும்பை கடற்கரை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் என்று அமெரிக்காவின் சர்வதேச புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications