ஓகி புயல் : கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து #CycloneOckhi
ஓகி புயல் சூறையாடி வருவதால் குமரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Recommended Video

கன்னியாகுமரி: ஓகி புயல் கன்னியாகுமரிக்கு தெற்கே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக குமரியில் காற்றோடு பலத்த மழை பெய்வதால் அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் உருவான தாழ்வுப் பகுதியானது இன்று காலை மேலும் தீவிரமடைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக உருவெடுத்துள்ளது.
குமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்தப் புயலுக்கு ஓகி என பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக் கிழமை அதிகாலை 2 மணி முதல், பலத்த சூறைக்காற்றுடன் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் துவங்கியது.

வேறோடு சாய்ந்த மரங்கள்
பலத்த சத்தத்தோடு வீசிய சூறைக்காற்றால் வடசேரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, ஈத்தாமொழி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மின்கம்பங்கள், சாலையோரம், வீட்டுப் பகுதிகளில் நின்ற மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மின்கம்பங்கள் சாய்ந்தன
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக வீசிய சூறைக்காற்றினால் பல மின்கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

முடங்கிய மாவட்டம்
போதிய மின்சாரம் இன்றி பெரும்பாலான தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் வேலை செய்யவில்லை. இதனால் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் முடங்கின.

தண்டவாளங்களில் மரங்கள்
ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் கம்பிகள் சூறைக்காற்றுக்கு அறுந்து விழுந்துள்ளதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து ரயில்களும் ரத்து
இதனிடையே கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 12க்கும் மேற்பட்ட பல ரயில்கள் ரதது செய்யப்பட்டுள்ளன.

ரயில்சேவையில் மாற்றம்
இதனிடையே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில் சேவைகள் இயக்கப்படுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி - திருவனந்தபுரம் ரயில் நெல்லை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படாது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications