Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ படம்... சொல்ல மறந்த கதைகள்... இது இல்லையே...ஜெயக்குமார் பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சர்ச்சைக்கு பெயர் போன தலைவி படம் நீதிமன்ற வழக்குகளை மீறி வெளியான நிலையில் படத்தை பார்த்த அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் இந்தப்படத்தில் 1989 ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களில் திமுக கொடுத்த தொல்லைகளை பதிவு செய்யவில்லை அது சொல்ல மறந்த கதையாக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆர் மறைவுக்குப்பின் அதிமுகவில் பலத்த போட்டிக்கிடையே பொறுப்பேற்றவர் ஜெயலலிதா. திமுகவின் மிகப்பெரும் ஆளுமை கருணாநிதியை எதிர்க்கொண்டு அரசியல் செய்தவர். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா தான் மறையும் வரை அக்கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார்.

D Jayakumar listed out the points missed out in Kangana Ranauts Thalaivi Movie.

இரும்பு பெண்மணி

இரும்பு பெண்மணியாக, தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமையாக செயல்பட்டு தான் தலைவியாக இருந்த அதிமுகவை மிகப்பெரும் வெற்றியையும் பெற வைத்தவர் ஜெயலலிதா. அதுவும் எம்ஜிஆர் காலத்தில்கூட பெற முடியாத பெருவெற்றியைப் பெற்றவர் ஜெயலலிதா. மோடி இல்ல இந்த லேடி என 2014 மக்களவை தேர்தலில் வெற்றிப்பெற்றதும், 2016 ஆம் ஆண்டு தனியாக அதிமுகவை போட்டியிட வைத்து பெருவெற்றி பெற்றதன்மூலம் ஜெயலலிதா அரசியலில் மிகப்பெரும் ஆளுமை என நிரூபித்தவர்.

திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் 75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் காலமானார். ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்கு பொதுச் செயலாளராக, ஆட்சியின் முதல்வராக அவரது செயல்பாடு ராணுவ கட்டுப்பாடுபோல் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அவரது மறைவுக்குப்பின் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பலரும் முயன்றனர்.

கங்கனா ரனாவத்தின் தலைவி

அதில் கங்கனா ரனாவத்தை வைத்து ஏ.எல்.விஜய் எடுத்த தலைவி முக்கியமானது. பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியான படத்தில் எதிர்ப்பார்த்த அரசியல் நிகழ்வுகள் இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. வரலாற்றைச் சொல்லும் படமாக எடுக்கப்பட்டாலும் 1991 ஆம் ஆண்டுவரை ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இணைந்து ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றிய மூத்த தலைவர் ஜெயக்குமார் படத்தை பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

"வரலாற்றை பதிவு செய்தால் சரியாக பதிவு செய்யவேண்டும். ஆனால் வரலாறு என்றால் திமுக ஆரம்பம் முதல் கடைசி வரை கொடுத்த தொல்லைகளை காட்சிப்படுத்தி இருக்க வேண்டும் அல்லவா? ஏதோ கருணாநிதி மிகவும் நல்லவர் போல் காட்சி அமைத்துள்ளார்கள். கட்சி ஆரம்பித்தபோது எம்ஜிஆருக்கு திமுக அரசும், கருணாநிதியும் கொடுத்த தொல்லையும், 1989 ஆம் ஜெயலலிதாவுக்கு கொடுத்த தொல்லையும் சொல்லி மாளாது அதையெல்லாம் பதிவிட்டிருக்க வேண்டும் அல்லவா?

சொல்ல மறந்த கதைகள்

அவையெல்லாம் சொல்ல மறந்த கதைகள். இதையெல்லாம் சொல்லியிருந்தால் நல்ல விஷயம். சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டால் நல்லதொரு படமாக எங்கள் கட்சிக்கும், பொதுமக்களுக்கும் அமையும். அதேபோல் எம்ஜிஆரின் ஆலோசனைப்பெற்றே ஜெயலலிதா செயல்பட்டார், ஆனால் எம்ஜிஆருக்கு தெரியாமல் ஜெயலலிதா செயல்பட்டது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதையெல்லாம் நீக்கிவிட வேண்டும்.

அதேபோல் சத்துணவு திட்டத்தில் குறை இருப்பதுபோல் உள்ளது அதையும் நீக்கவேண்டும். படத்தில் என் பெயரும் வருகிறது. பெரிய அளவுக்கு வரலாற்றுத்தலைவருடன் பயணித்த மகிழ்ச்சியும் பெருமையும் உள்ளது. 1982 முதல் ஜெயலலிதாவுடன் பயணித்ததால் அந்த மலரும் நினைவுகள் வந்துபோகுது. சில காட்சிகளை நீக்கிவிட்டால் எல்லோரும் ரசிக்கும் படமாக அமையும்.

எங்கள் ஆட்சியிருந்தால் திமுக கொடுத்த தொல்லைகள் உள்ள காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும், நடப்பது திமுக ஆட்சி என்பதால் அந்த காட்சிகளை நீக்கியிருப்பார்கள். எங்கள் ஆட்சி நடந்திருந்தால் திமுக பிரயோகித்த அத்தனை அத்துமீறல்களும் வெளிப்பட்டிருக்கும். சசிகலாவை பொறுத்தவரை அவர் பணி செய்யவந்தவர். அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை அதனால் அவர் குறித்த காட்சிகள் இந்தப்படத்தில் அதிகம் இல்லை.

2 ஆம் பாகம் வரவேண்டும்

1991 வரை உள்ள வரலாற்றை படமாக்கியுள்ளார்கள் இரண்டாவது பாகமும் வந்தால் நன்றாக இருக்கும். நிறைய வரலாற்று நிகழ்வுகளை சொல்லவில்லை. 1989 ஆண்டு சட்டசபை நிகழ்வுகளை பதிவு செய்யப்பட்ட விதம் பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இயக்குநருக்கு பாராட்டு. ஆனால் அன்று நடந்த நிகழ்வை கருணாநிதி கருப்பு தினம் என்று சொன்னதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தில் ஹீரோ, ஹீரோயின் நன்றாக நடித்துள்ளனர். நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை படத்தில் பார்த்தோம். தயாள குணம் கொண்டவர் ஜெயலலிதா. அதைக் காட்சிப் படுத்தியுள்ளார்கள்.

இவ்வாறு ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+