டி.ராஜா தனது மகளை சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு உத்தரவிட வேண்டும் - எச்.ராஜா
கோவை: தேச துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் தனது மகளை சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு டி.ராஜா உத்தரவிட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா, தேச துரோக செயல்களை ஊக்குவிக்கும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுசெயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர். டி.ராஜா ஆகியோர் இந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என குறிப்பிட்டார்.
கம்யூனிஸ்டுகள் தங்களை தேச பக்தர்கள் என கூறி கொள்கிறார்கள் ஆனால் டி. ராஜாவின் மகள் தேச விரோத போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். டி. ராஜா தனது தேச பக்தியை நிரூபிக்க தனது மகளை சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு உத்தரவிட வேண்டும் என எச். ராஜா கூறினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இதனை குறிப்பிட்டார். எச் ராஜாவின் கருத்துக்கு பதில் கூற டி.ராஜா மறுத்து விட்டார் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு பெரியார் மற்றும் கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை இழிவாக பேசியதாக எச் ராஜா மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது நினைவு கூறத்தக்கது. அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு பெயர் போன எச்.ராஜாவின் பேச்சு மீண்டும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜவின் மாணவரணியான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான கன்யாகுமார், இ.கம்யூனிஸ்ட் மாணவரணியைச் சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜாவின் மகளும் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். அவரும் கன்யாகுமாருக்கு ஆதரவாக போரட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications