சென்னையில் மசூதி சுவர் இடிப்பு - இளைஞருக்கு சரமாரி அடி!
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள கக்கன் காலனி மசூதி இடிப்பு பிரச்சனை தொடர்பாக ஒருவர் தாக்கப்பட்டார்.
பெசன்ட் நகர் கக்கன் காலனி பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. நேற்று அங்கு விநாயகர் சிலையைக் கடலில் கரைத்து விட்டு வந்த குழு ஒன்றிற்கும், அதே இடத்தில் அசைவம் சமைத்த மற்றொரு குழுவினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு சில அடையாளம் தெரியாதவர்கள், அக்காலனி மசூதியின் சுற்றுச் சுவரை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கோபமடைந்த காலனி மக்கள் இளைஞர் ஒருவரை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் இரண்டு சமூகத்தினரும் இடையே பிரச்சினை வலுத்தது. இரு தரப்பும் போலீஸில் புகார் கொடுத்தது.
இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க இரு தரப்பு தலைவர்களையும் அழைத்துப் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு காணப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பும் மோதலைக் கைவிட்டுக் கலைந்து சென்றது.












Click it and Unblock the Notifications