சசி முதல்வர் பதவி ஏற்க ராசியான தேதிகள் ரெடி.. தயாராகி வருகிறது மன்னார்குடிப் படை
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கான தேதிகள் முடிவாகிவிட்டன. அதற்கான ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக அண்மையில் பதவி ஏற்ற சசிகலா, அடுத்ததாக தமிழக முதல்வராகவும் பதவி ஏற்க தயாராகி வருகிறார். பதவி ஏற்பதற்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியை எந்த வித கஷ்டமும் இல்லாமல் பெற்றுவிட்டார் சசிகலா. இதே போன்று முதல்வர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதற்கான வேலைகளை மன்னார்குடி சொந்தபந்தங்கள் படுஜோராக செய்து வருகிறது.

சசிகலா பதவி ஏற்க தோதான ராசியான நாட்களை ஜோதிடர்களை சந்தித்து மன்னார்குடி வகையறாக்கள் வாங்கியுள்ளன. அதன்படி வரும் 14 மற்றும் 16ம் தேதி நல்ல நாட்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
என்றாலும், முன்னர் வினை காத்திருக்கிறது சசிகலாவிற்கு. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து மரணம் ஜெயலலிதாவை காப்பாற்றிவிட்டது என்றாலும் உயிரோடு இருக்கும் சசிகலா பதில் சொல்லியே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறார். அதற்கான தீர்ப்பு விரைவில் வர உள்ளதால், முதல்வர் கனவை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications