For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைன் வாக்கெடுப்பில் தயாநிதி மாறனுக்கு 73% ஆதரவு- மா.சு சொல்கிறார்!

Google Oneindia Tamil News

Dayanidhi Maran has more support than ADMK candidate in Chennai Central, says M Subramaniam
சென்னை: மத்திய சென்னை தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து ஆன்லைனில் கருத்து கணிப்பு நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு 73.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிமுகவுக்கு 10.3 சதவீதமும், பாரதீய ஜனதாவுக்கு 9 சதவீதமும் கிடைத்துள்ளது என்று புள்ளி விவரத் தகவலை வெளியிட்டுள்ளார் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்.

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி செயல் வீரர்கள் கூட்டம் சூளையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு மா.சு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் தான் உலகிலேயே செல்போன் கட்டணம் குறைவு. இந்த சாதனைகளை கலைஞர் ஆலோசனைப்படி நிகழ்த்தியவர் தயாநிதிமாறன்.

மத்திய சென்னை தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து இன்டர்நெட் ஆன்லைனில் கருத்து கணிப்பு நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு 73.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிமுகவுக்கு 10.3 சதவீதமும், பாரதீய ஜனதாவுக்கு 9 சதவீதமும் கிடைத்துள்ளது.

கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு பிறகு தயாநிதி மாறனுக்கான ஆதஆதரவு 90 சதவீதமாக உயரும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கே ஆதரவு உள்ளது என்றார்.

அவர் பேசி முடித்ததும் தயாநிதி மாறன் பேசினார். அவர் கூறுகையில், கலைஞர் 13 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று நாட்டின் தலைஎழுத்தையே மாற்றினார். மு.க.ஸ்டாலின் திருமணமான 3 மாதத்தில் மிசாவில் கைதாகி சிறை கொடுமையை அனுபவித்தார். தமிழகத்தின் எதிர்காலமாகவும் திகழ்கிறார். அவர்கள் இருக்கும் இயக்கத்தில் நாம் இருப்பது பெருமை.

இங்கு நான் வேட்பாளர் இல்லை. தலைவர் கலைஞரும், மு.க.ஸ்டாலினும்தான் போட்டியிடுகிறார்கள். இளைஞர்களும் மாணவர்களும் எழுச்சியோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

English summary
DMK's Dayanidhi Maran has more support than ADMK candidate in Chennai Central, said former Chennai mayor M Subramaniam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X