சென்னையில் பயங்கரம்… பர்தா அணிந்து வந்து பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை!
சென்னை: சென்னை ஜாம் பஜார் பகுதியில், தனியாக வீட்டில் இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டு விட்டு பின்னர் கொலையும் செய்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் சிலர்.
பெண் வேடமிட்டு அதாவது பர்தா அணிந்து வந்து இந்த துணிகரச் செயலை அவர்கள் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்பஜாரை சேர்ந்தவர் சையது அலி. இவரது மனைவி மொகரூனிஷா. இன்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
அப்போது பெண்களை போன்று பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெகரூனிஷா மகனை தங்களுக்கு தெரியும் என்றும், அவர் அனுப்பியதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மொகரூனிஷாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்தனர்.
பட்டப் பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் தனிப்படைகளை அமைத்து தற்போது கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications