கடன் தொல்லை: குடும்பத்துடன் ரயில் முன்பு பாய்ந்த மாமல்லபுரம் கான்டிராக்டர்
சென்னை: செங்கல்பட்டு அருகே கட்டுமான தொழில் ஒப்பந்ததாரர் ஒருவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் குடும்பத்துடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவர் குமரன். கட்டுமான தொழில் ஒப்பந்ததாரரான அவர் ரூ.50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிய அவர் தனது மனைவி மாலதி, மகள் மோனிகா (15), மகன் கணேஷ்(6) ஆகியோருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இரண்டு பூச்சிக் கொல்லி மருந்து பாட்டில்களை வாங்கினார். குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் டோல் கேட் சென்றுள்ளார்.

அங்கு சென்றபோது விஷம் குடித்து இறந்துவிடாமல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்த அவர் குடும்பத்தோடு ரயில் முன்பு பாய முடிவு செய்தார். அதன்படி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன்பு அவர் குடும்பத்துடன் குதித்தார். இதில் குமரன், அவரது மனைவி மாலதி, மகள் மோனிகா ஆகியோர் பலியாகினர்.
குமரனின் மகன் கணேஷ் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications