சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர்கள் சடலம்: தென்காசியில் பதற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் சாக்குமூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கொலை செய்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தென்காசி அருகேயுள்ளது பாவூர் சத்திரம் இந்த ஊருக்கு வடக்கே குறும்பலாப்பேரி குளத்தின் கரையில் சாக்குமூட்டை ஒன்று மர்மமான முறையில் கிடந்துள்ளது. அந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாவூர் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் ஆடைகள் கலைந்த நிலையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள் கிடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சுரண்டை வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் மாரிசெல்வம், அவரது உறவினர். பரமசிவன் மகன் 10ஆம் வகுப்பு படிக்கும் முருகன் ஆகியோரை காணவில்லை என்று சுரண்டை போலீசில் கடந்த 1ஆம் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது போலீசுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவிக்கவே உறவினர்கள் சடலங்களை அடையாளம் காட்டினர். சடலங்களைப் பார்த்து உறவினர்களா கதறி அழுதனர்.
மாணவர்களுக்குள் ஏற்ப்பட்ட மோதல் காரணமாக நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த நெல்லை மாவட்ட எஸ்.பி நரேந்திரன் நாயார், குற்றவாளிகளை தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் போல்தான் தெரிகிறது. இது ஜாதீய மோதல்கள் அல்ல என்றும் அவர் கூறினார். இருப்பினும் வெள்ளக்கால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுக்கப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தொடர்கொலைகள் நடைபெற்றன. இது சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த நிலையில் வாலிபர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications