அலர்ட் மெசேஜ்.. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பவேண்டும்: வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (நவம்பர் 27) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறையில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரம்.. தரமான சம்பவம் இருக்கு! 8 மாவட்டங்களில் 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.
இதேபோல நாளை 27.11.2023 முதல் 01.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications
