பணத்துக்காக தீபா கட்சியை தாரைவார்த்துவிட்டார்- மேட் பேரவை மா.செ. 'பரபர' குற்றச்சாட்டு - வீடியோ

பணத்தை வாங்கிக்கொண்டு தொண்டர்களையும் மாவட்ட செயலாளர்களையும் தீபா ஏமாற்றிவிட்டதாக 'மேட்' பேரவையின் சென்னை ஆர்கே நகர் மாவட்ட செயலாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: பணத்துக்காக கட்சியை தாரை வார்த்துவிட்டார் என தீபா மீது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைச் சேர்ந்த சென்னை ஆர்கே நகர் மாவட்ட செயலாளர் புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பு நிறுவி நடத்தி வருகிறார். இந்த பேரவை சார்பாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தீபா போட்டியிட்டார்.

Deepa cheated us told Mad peravai disrict secretary

அப்போது புகழேந்தி என்ற மாவட்ட செயலாளர் தீபாவின் 'மேட்' பேரவை வளர்ச்சிக்கும் ஆர்கே நகரில் தீபா வெற்றிக்கும் உழைத்துள்ளார்.

அவர்தான் தற்போது தீபா மீது குற்றம்சாட்டியுள்ளார். ''பேரவையில் சேருவதற்கு உறுப்பினர்களிடம் கட்டணம் வாங்கிக்கொண்டு அதற்கு எந்த ரசீதும் கொடுக்கவில்லை. அதன்மூலமே பல லட்சம் பணம் சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல், மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு பல லட்சம் பணம் வாங்கினார் தீபா'' என்று புகழேந்தி குற்றம்சாட்டினார்.

நெசப்பாக்கம் ஜானகிராமன், தீபா தன்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு தீபா ஏமாற்றிவிட்டார் எனக் கூறி மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+