ஜெ. சிகிச்சை அறிக்கைகளை ஏற்க முடியாது- நீதி விசாரணை தேவை: தீபா
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை ஏற்க முடியாது என்றும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீபா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது; முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் நேற்றைய அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஆரம்பத்தில் செப் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய அறிக்கையில் மூச்சு கோளாறு போன்ற காரணத்திற்காக மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் ஜெயலலிதா உணவு அருந்தினார், நடைபயிற்சி மேற்கொண்டார் ,தொலைக்காட்சி பார்த்தார் என வந்த தகவல்கள் எதுவும் உண்மையானவை என இதுவரை மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்படவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல்வேறு சந்ந்தேகங்கள் இந்திய அளவில் நிலவி வருகின்றது. இதை தெளிவு படுத்த வேண்டிய தமிழக அரசு குழப்ப நிலையில் உள்ளது.
முறையான நீதி விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு விளக்கம் தர வேண்டும். நேற்றைய மருத்துவ அறிக்ககள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தீபா வலியுறுத்தியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications