நான் அரசியலுக்கு வருவதை பிரபல பத்திரிகைகள் எதிர்க்கின்றன: தீபா
சென்னை: நான் அரசியலுக்கு வருவதை பிரபல பத்திரிகைகள் எதிர்க்கின்றன. நான் முன் வைத்த காலை ஒருபோதும் பின் வைக்க மாட்டேன் என தீபா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரரின் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் அழைப்பு விடுத்துள்ளனர். அவ்வப்போது அவர் வீட்டின் முன்பு கூடி தீபாவை அரசியலுக்கு வருமாறு கூறுகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து தீபா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பத்திரிகைகள்
நான் அரசியலுக்கு வருவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பிரபல பத்திரிகைகள் நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது வருந்தத்தக்கது.

கருத்து
புதிய அமைப்பு துவங்குவது குறித்து ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். தொண்டர்களும், மக்களும் விரும்பினால் நிச்சயம் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம். முன்வைத்த காலை ஒருபோதும் பின் வைக்க மாட்டேன்.

தொண்டர்கள்
என்னை நம்பும் தொண்டர்களை ஏமாற்ற மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் மெரினா கடற்கரைக்கு சென்றேன். ஆனால் என்னைப் பற்றி ஏதேதோ தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

அரசியல்
என்ன ஆனாலும் சரி அரசியலை விட்டு போக மாட்டேன். தொண்டர்களிடம் கருத்து கேட்டு முடித்த பிறகு தீர்க்கமான முடிவை எடுப்பேன் என தீபா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications