களை கட்டுகிறது ஆர்.கே.நகர் தேர்தல்.. ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தும் தீபா வேட்புமனு ஏற்பு!
சென்னை: சரியான தகவல்களை வேண்டுமென்றே மறைத்ததற்காக தீபா வேட்புமனு தள்ளுபடியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.
ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளதாக கூறி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பு நடத்திவரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக நேற்று ஜெ. நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு தண்டையார் பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பிரவீண் நாயரிடம் வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.

குளறுபடி
இந்த வேட்புமனுவில் பல குளறுபடிகள் உள்ளன. இந்த குளறுபடிகளை தெரிந்தே தீபா செய்துள்ளதாக கூறப்பட்டது. வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு இதை தீபா செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஏனெனில் அனைத்துமே அப்பட்டமாக தெரியும் குளறுபடிகளாகும்.

கணவர் பெயர் இல்லை
பெரிய குளறுபடி என்ன தெரியுமா? தீபாவின் வேட்புமனுவில் தனது கணவர் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் தீபாவின் வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரமும் முழுமையாக குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியானது.

பேரவை பெயர் இல்லை
தீபா தான் தொடங்கிய பேரவையை இதுவரை பதிவு செய்யாததால், பேரவையின் பதிவு எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட முடியவில்லை. இதுபோன்ற இந்னும் சில காரணங்களால் தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் தீபா என்று கூறினர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கள நிலவரம்
ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற கள நிலவரத்தை அறிந்துகொண்டு, சதி காரணமாக தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை என ஸ்டன்ட் அடித்து அரசியலில் முன்னேறலாம் என தீபா திட்டமிட்டே இதை செய்ததாக கூறப்பட்டது. ஆர்கேநகரில் தோற்றால் அத்தோடு தனது அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் என்பதால், இப்படி சில பல ஸ்டன்டுகளை அடித்து ஆதரவை பெருக்கலாம் என்பது அவரது திட்டமாக இருக்கலாம் என்றார்கள். ஆனாலும் தீபாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இது தீபாவுக்கே அதிர்ச்சியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications