குழித்தலையில் 'ஜெயலலிதா தீபா' பேரவை துவக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கரூர்: குழித்தலை அருகே திம்மம்பட்டி ஊராட்சி அளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேரவைக் கூட்டம் நடந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவுக்கு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குழித்தலையில் ஜெயலலிதா தீபா என்ற பெயரில் பேரவை துவங்கியுள்ளனர் அதிமுகவினர்.

Deepa supporters in kulithalai

இப் பேரவைக்கூட்டத்தில் தீபா தலைமையில் அதிமுகவை வலி நடத்தவேண்டும். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றவும் நன்கு படித்தவர்.அம்மாவின் ரத்த உறவான தீபாவை ஆதரிக்கவும். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தீபா வெற்றிக்கு கட்சி பணியாற்றிடவும் தீபாவின் வலிகாட்டுதல்படி செயல்படுவது என பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 70 க்குமேற்பட்டோர்கள் கலந்துக்கொண்டனர்.

Deepa supporters in kulithalai

மேலும் குழித்தலை, தோகைமலை, லாலா மற்றும் கிராம பகுதியில் தீபாவை ஆதரித்து டிஜிட்டல் பேனர் அதிமுக பிரமுகர்கள் போட்டோ போட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில், 'இதயதெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் ரத்தத்தின் ரத்தமான அண்ணன் மகள் தீபா அவர்களை தலைமையில் கழக பணியாற்றிட ஒன்றுபடுவோம்' என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதிமுக நிர்வாகிகளே, தீபா ஆதரவு பேனர் வைத்துள்ளதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+