அதிமுக போராட்டங்கள் எதிரொலி: சென்னைக்கு வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திரும்பி ஓட்டம்

இலங்கைக்கு எதிரான 15 வயதுக்கு உட்டோருக்கான கிரிக்கெட்டில் பங்கேற்க இலங்கை வீரர்கள் 16 பேர் வந்திருந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் அவதூறு கட்டுரை வெளியாகியது.
இதனால் இலங்கைக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டன. இலங்கைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
இதையடுத்து இலங்கை மன்னிப்பு கேட்டபோதிலும், கட்டுரையால் ஏற்பட்ட காயம் தமிழகத்தில் ஆறவில்லை. எனவே இன்றும்கூட தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சென்னையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் விமானத்தில் வீரர்கள் இலங்கை சென்றடைந்தனர்.