டிடிவி.தினகரனை வீட்டில் வைத்து விசாரிக்கிறது டெல்லி போலீஸ்! சோதனை நடத்தவும் திட்டம்?

சென்னை அழைத்துவரப்பட்ட டிடிவி தினகரனிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விசாரணைக்காக இன்று சென்னை அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரனை பெசன்ட் நகர் சிபிஐ ஆபிஸில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது அவரது வீட்டில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். டிடிவி. தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸ் இன்று சென்னை அழைத்து வந்துள்ளது.

Delhi Police brings TTV.Dinakaran and his friend Mallikarjuna to Chennai for inquiry

அவரிடம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்துவழக்கறிஞர் குமார் வீடு, தினகரன் வீடு ஆகிய இடங்களில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

டிடிவி தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். மேலும் டிடிவி தினகரனை பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+